Independence Day Celebration at Perambalur Combined Court
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், இன்று 78 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதியும், (பொறுப்பு) மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதியுமான இந்திராணி தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும், டாக்டர் அம்பேத்கர், நீதிமன்ற வாதங்களையும் அவர் இற்றிய சட்டங்களையும் எடுத்துரைத்து அவர் வழியினை அனைவரும் பின்பற்ற வேண்டும். கடமையை கண்ணும் கருத்துமாக உண்மையாக நேர்மையாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் வரிகளுக்கு ஏற்ப நமது கடமைகளை நாம் செய்ய வேண்டும், என்றும் அனைவருக்கும் உதவி செய்தல் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை யாரேனும் பெறவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தி அவர்களுக்கு பெற்று தருவது நமது கடமையாகும் என்றும் பேசினார்.
குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி தனசேகரன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சங்கர் சிறப்புரை ஆற்றினர். சார்பு நீதிபதி அண்ணாமலை மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெயக்குமார் உட்பட நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவர் செந்தாமரைக்கண்ணன், பார் அசோசியேஷன் சங்க செயலாளர் சேகர் மற்றும் பேரா முருகையன் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர் வாசுதேவன், அரசு சிறப்பு வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜா பரமேஸ்வரர் நன்றி கூறினார்.