Introducing New App for Athletes and Athletes: Perambalur Collector Info!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட பிரிவு 2022 – 2023 ஆம் ஆண்டு முதற்கொண்டு இனி வரும் காலங்களில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கு பெற மற்றும் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விளையாட்டு செய்திகளை தெரிந்துக்கொள்வதற்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இனி வரும் காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலியான (TNSPORTS- APP) ஆடுகளம் மற்றும் tnsports.org.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்திட வேண்டும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்கள் இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் மற்றும் விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இனி வரும் காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்த வீரர்களுக்கு மட்டுமே digi locker மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் (TNSPORTS- APP) ஆடுகளம் செயலியில் விரைவாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.