Introduction of new administrators at young women, and the General Meeting of the Association of the proletariat (PMK)! GK Mani
பா.ம.க. தலைவர் கோ.க.மணி விடுத்துள்ள அறிக்கை:
பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பான பாட்டாளி இளம் பெண்கள் சங்கத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி மற்றும் இளம்பெண்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கிறது.
சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் பொதிகைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள அண்ணா கலையரங்கில் 25-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும். பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூட்டத்திற்கு தலைமை ஏற்பதுடன் புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி உரையாற்றவுள்ளார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்குகின்றனர். இளம்பெண்கள் சங்கத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
பாட்டாளி இளம்பெண்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி மற்றும் இளம்பெண்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் இளம்பெண்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இளம்பெண்கள் சங்க பணித்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது, என தெரவித்துள்ளார்.