Items worth Rs. 4 lakh, including a Pulsar bike, camera, Rs. 1 lakh in cash, and gold jewellery stolen in Perambalur!

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள கல்யாண நகர் கீத்துக்கடை பகுதியில், போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருபவர் புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவர் நேற்று இரவு வழக்கம் போல் ஸ்டுடியோவை பூட்டிவிட்டு இன்று மதியம் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் உள்ளே வைத்திருந்த இரண்டு லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கேமரா, லைட் எக்யூப்மென்ட் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.

இதேபோல், அதே பகுதியில் அடுத்தடுத்த வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஓ., சிஸ்டம் கடையில் ரூ. 27 ஆயிரம் ரொக்க பணமும், லோகேஷ் ஷர்மா என்பவர் நேற்றுத் திறந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான புத்தம் புதிய LED டிவியும், துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் பிரவீன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் உன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்சர் பைக்கும், ஒரு பவுன் நகையையும் என 4 இடங்களில் பூட்டை உடைத்து 2.50 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், 1 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குகு வந்த பெரம்பலூர் போலீசார், வழக்குப்பதிவு செய்ததோடு, தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். .

நகரின் பிரதான சாலையில் அடுத்தடுத்த வாடகை கட்டிடங்களில், இயங்கும் 3 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் பெரம்பலூர் வாழ் வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எல்இடி டிவி திருடு போன கடை நேற்று காலை தான் புதிதாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!