Jallikattu: Governments in the tear the veil soon: Congress Velusami
ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் இரட்டை வேடத்தின் முகத்திரை விரைவில் கிழியும் என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி தெரிவித்தார்.
பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியின் 131 ஆம் ஆண்டு நிறைவு விழா, இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா, சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, தற்போது முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பாரதீய ஜனதா கட்சி நிரப்பும் என தமிழிசை கூறியிருப்பது நடக்காது. தமிழ்நாட்டில் எத்தனை முறை வெற்றிடம் உருவானலும், எந்த காலத்திலும், தமிழ்நாட்டில் பி.ஜே.பி என்பது அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடிய சக்தியாக வராது, வரவே முடியாது என தெரிவித்த அவர், முதலமைச்சர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் மேல் நடவடிக்கை எடுக்க வில்லை. கடந்த காலத்தில் எம்.ஜி.ஆரை, காப்பற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி விதிகளை மீறி தனி விமானத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். அதே போல் செய்யாமல் ஜெயலலிதாவின் மரணத்திலும் விட்டுவிட்டனர். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது தவறுகள் நடந்து இருந்தால், மரணத்தில் மர்மம் உள்ளது. அதற்கு உள்துறை அமைச்சகத்திற்கும், பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டில் ஒரு கவர்னர் இருக்கின்றார். அவரும் பல முறை மருத்துவமனைக்கும் சென்று வந்தார். ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் இரட்டை வேடத்தின் முகத்திரை விரைவில் கிழியும் என்றும் தெரிவித்தார்.
கூட்டம் மாவட்டத் துணைத் தலைவர் தேனூர் க.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ப. சிவாஜி மூக்கன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் த. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, மாவட்டத் தலைவர் அரும்பாவூர் சின்னசாமி, பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரத்தீஷ், வட்டாரத் தலைவர்கள் ரெங்கராஜ் (பெரம்பலூர்), அருணாசலம் (ஆலத்தூர்), செங்கமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனித உரிமை துறை மாவட்டத் தலைவர் டி.காமராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சு.திருநாவுக்கரசரை காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கும், துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிக்கப்ட்டது. நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும், மாநிலத் தலைவர் கோரிக்கை ஏற்று தேர்தலில் போட்டியிடுவது என்றும், ராகுல் காந்தி வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராக்க ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்துடன், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பழைய ரூ.500, ஆயிரம் செல்லாதவையாக அறிவிக்ப்பட்டதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் விதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.