பெரம்பலூர் மாவட்டத்தில் 1431- ஆம் பசலிக்கானவருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் 25.05.2022 அன்று முதல் 27.05.2022 வரை 3 நாட்கள் நடைபெற்றது.

பெரம்பலுார் வட்டத்தில் 728 மனுக்கள் பெறப்பட்டு அதில் 376 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. 335 மனுக்கள் விசாரணையில் உள்ளது. உரிய காரணங்களுக்காக 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வேப்பந்தட்டை வட்டத்தில் பெறப்பட்ட 466 மனுக்களில் 207 மனுக்கள் ஏற்கப்பட்டு, 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, மீதமுள்ள 237 மனுக்கள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நிலுவையில் உள்ளது.

அதேபோல, குன்னம் வட்டத்தில் பெறப்பட்ட 325 மனுக்களில் 107 மனுக்கள் ஏற்கப்பட்டது. 32 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 186 மனுக்கள் விசாரணை நிலுவையில் உள்ளது. ஆலத்துார் வட்டத்தில் பெறப்பட்ட 289 மனுக்களில் 185 மனுக்கள் ஏற்கப்பட்டு 104 மனுக்கள் விசாரணையில் உள்ளது.

ஆகமொத்தம் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் சேர்த்து 1,808 மனுக்கள் பெறப்பட்டு அதில் 875 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 862 மனுக்கள் விசாரணையில் உள்ளது, என கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்தார்.

English Summary: Jamabandhi completed in Perambalur district: 875 out of 1,808 petitions accepted!

ADVT : விளம்பரம்


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!