பெரம்பலூர் மாவட்டத்தில் 1431- ஆம் பசலிக்கானவருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் 25.05.2022 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் வட்டத்தில் நேற்று (25.05.2022) குரும்பலூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட குரும்பலூர் (தெற்கு), குரும்பலூர் (வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு), மேலப்புலியூர்(மேற்கு), லாடபுரம் (மேற்கு), லாடபுரம் (கிழக்கு), அம்மாபாளையம், களரம்பட்டி மற்றும் சத்திரமனை ஆகிய கிராமங்களுக்கும், இன்று (26.05.2022) குரும்பலூர் பகுதிக்குட்பட்ட பொம்மனப்பாடி ,வேலூர் மற்றும் பெரம்பலூர் குறுவட்ட பகுதிக்குட்பட்ட எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூர் (தெற்கு), பெரம்பலூர் (வடக்கு) ஆகிய கிராமங்களுக்கான 1431- ஆம் பசலிக்கானவருவாய் தீர்வாயம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது.

நேற்று (25.05.2022) நடைபெற்ற 1431- ஆம் பசலிக்கானவருவாய் தீர்வாயத்தில் 107 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 105 மனுக்கள் ஏற்கப்பட்டது, 02 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பெறப்பட்ட 105 மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் 43 பயனாளிகளுக்கு பட்டா, 01 பயனாளிக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 01 பயனாளிக்கு விதவை பராமரிப்பு உதவித் தொகைக்கான ஆணை என மொத்தம் 45 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வெங்கடபிரியா வழங்கினார்.

இன்று (26.05.2022) நடைபெற்ற தீர்வாயத்தில் 416 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 03 மனுக்கள் ஊரக வளர்ச்சித்துறைக்கும் 01 மனு மாவட்ட பிற்படுத்தோர் நலத்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 412 மனுக்கள் ஏற்கப்பட்டது, 254 மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் பயனாளிகளுக்கு நத்தம்பட்டா, வீட்டுமனைபட்டா. தனிப்பட்டா என 254 பட்டாக்கள் வழங்கப்பட்டது. 158 மனுக்கள் மீது விரைந்து விசாரனை மேற்கொண்டு பட்டாக்கள் மற்றும் முதியோர் உதவித் தொகை, விதவை பராமரிப்பு உதவித்தொகை போன்ற மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!