Kalaignar Karunanidhi’s 99th Birthday: Speech Competition among Perambalur District College Students: Prizes for the Winners!

File Copy

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

நாட்டின் விடுதலை மற்றும் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவராக கூறப்படும் முன்னாள் முதலமைச்சரின் 99வது பிறந்த நாளையொட்டி அவரது கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாவட்ட அளவில், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா தலைமையுரையாற்றினார். கல்லூரிப் போட்டிக்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மு. அன்பழகன், கௌரவ விரிவுரையாளர்கள் கலியமூர்த்தி , ரேவதி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

போட்டியில் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு பயிலும் உ. காயத்ரி முதல் பரிசு ரூ.5 ஆயிரத்தையும் , தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு உணவு தொழில் நுட்பம் பயிலும் க.யோகேஷ் இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரத்தையும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு ஆண்டு பயிலும் இ. பூபாலன் மாணவன் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரத்தையும் தட்டி சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!