Karunanithi centenary celebrations in Perambalur district! DMK district in-charge V. Jagatheesan report!

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

19.06.2024 அன்று வேப்பூர் வடக்கு ஒன்றியம், அத்தியூர் கிராமத்தில், ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் தலைமையில் , செந்தில்கணேஷ் – ராஜலெட்சுமி நாட்டுப்புற இசைக் கச்சேரியுடன் துவங்கி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்- மாவட்ட திமுகு பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் சிறப்புரையாற்றுகின்றனர்.

20.06.2024- வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில், ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லதம்பி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.ந.பெருநற்கிள்ளி, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு – எம்.எல்.ஏ பிரபாகரன் கலந்து கொண்டு
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்புரையாற்றுகின்றனர்.

21.06.2024 – வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம், வேப்பந்தட்டை கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு பாடநூல் வாரியத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், .என்.அருண்நேரு.எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

22.06.2024 – பெரம்பலூர் ஒன்றியம், புதிய பேருந்து நிலையத்தில், ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார் ஏற்பாட்டில், லஷ்மண் சுருதி இன்னிசைக் கச்சேரியுடன் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயவாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.இராசா, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி கே.என்.அருண் நேரு, எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

23.06.2024 – பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், பெரம்பலூர் அரசுப்பள்ளியில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி, வாலிபால் போட்டி, கபடி போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெறுபவர்களுக்கு, தமிழன் பிரசன்னா, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு. எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர்.

24.06.2024 – பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், பெரம்பலூர் நகரத்தில், சுப.வீரபாண்டியன், மதுக்கூர்.ராமலிங்கம், மதிவதனி ஆகியோர் தலைமையில் தடைபெறும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, எம்.ஏல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

25.06.2024 – பெரம்பலூர் நகரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், கழகத்துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கலந்து கொண்டு, ஏழை,எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இதில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, எம்.ஏல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

26.06.2024 – பெரம்பலூர் மாவட்ட மாணவரணி சார்பில், சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டிகளை துவக்கி வைத்து, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் அமுதரசன், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர்.

27.06.2024- வேப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில், குன்னம் கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் வாரியத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ,மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

28.06.2024 – பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர் தலைமையில் நடைபெறும் ஆங்கில கருத்தரங்கம் நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எழிலன், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, எம்.ஏல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

28.06.2024 – பெரம்பலூர் மாவட்ட மகளிரணி சார்பில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், திருமதி. அருள்மொழி,பேராசிரியை நாகநந்தினி, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, எம்.ஏல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

29.06.2024- ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம்,கொளக்காநத்தம் கிராமத்தில், ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தடைபெறும் பொதுக்கூட்டத்தில், சட்டமன்ற கொறடா கோ.வி.செழியன்,போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

30.06.2024 – ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், செட்டிக்குளம் கிராமத்தில், ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில் நடைபெறும் கண் சிகிச்சை முகாமை, கழக சட்டத்திருத்தக்குழு உறுப்பினர் சுபா. சந்திரசேகர், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, எம்.ஏல்.ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர்.

30.06.2024 – பெரம்பலூர் மாவட்ட மருத்துவரணி சார்பில், நூத்தப்பூர் கிராமத்தில் நடைபெறும் இலவச மருத்துவ சிகிச்சை முகாமை, கழக சட்டத்திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், கே.என்.அருண்நேரு.எம்.பி.,சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

30.06.2024 – பெரம்பலூர் நகர கழகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டத்தில், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா. எம்.பி., கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, எம்.ஏல்.ஏ பிரபாகரன் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில், அந்தந்த ஒன்றிய செயலாளர்கள் மேற்கண்ட கூட்டத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் எனவும், இதில் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துனை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!