khelo India 2016-17 scheme: District-level game, Test Details.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா விடுத்துள்ள தகவல் :
2016-2017-ஆம் ஆண்டு கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் பெரம்பலூh; மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் தடகளம், டேக்வாண்டோ, கையுந்துப்பந்து, பளு தூக்குதல், பூப்பந்து, குத்துச்சண்டை,நீச்சல், மேஜைப்பந்து, டென்னிஸ், கபடி, ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும், தேர்வுப்போட்டிகளாக சைக்கிள் ஓட்டுதல் கூடைப்பந்து, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், கோ-கோ, வுஷு, கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, வில்வித்தை, ஜுடோ ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
6.01.2017 அன்று தடகளம், கையுந்துப்பந்து, பூப்பந்து, மேஜைப்பந்து, கபடி, ஆகிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வுப் போட்டிகளான ஹாக்கி, வில்வித்தை, ஜுடோ, சைக்கிள் ஓட்டுதல், கூடைப்பந்து ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளது.
07.01.2017 அன்று டேக்வாண்டோ, பளு தூக்குதல், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், தேர்வுப் போட்டிகளான கால்பந்து, கோ-கோ, கைப்பந்து, மல்யுத்தம், வுஷு, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளது.
14-வயது மற்றும் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ, 400 மீ, ஓட்டப்போட்டிகள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்(4-கிகி) மற்றும் 4ழூ100மீ தொடர் ஓட்டம் ஆகிய தடகளப் போட்டிகளும், 50மீ ப்ரி ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ பட்டர்பிளை, 4 X 50 மீ ப்ரி ஸ்டைல் ரிலே, ஆகிய நீச்சல் போட்டிகள் நடைபெறும்.
இந்த மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவார்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு கொள்வார்கள். இதில் கலந்து கொள்பவர்கள் 14-வயதிற்குட்பட்டோர் 01.01..2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். 17-வயதிற்குட்பட்டோர் 01.01.2000 அன்றோ அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் பிறப்புச் சான்று மற்றும் அடையாள அட்டை சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் வீரா;ஃவீராங்கனைகளுக்கு உணவுப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படும்.
தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களில் ஒரு பிரிவில் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவார்கள். தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு உணவுப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படமாட்டாது.
மாநில அளவிலான விளையாட்டு மற்றும் தேர்வுப்போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதனடிப்படையில், நீச்சல், சைக்கிள் ஒட்டுதல், மல்யுத்தம், டேக்வாண்டோ,கையுந்து பந்து, கால்பந்து,பூப்பந்து, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையிலும்,
கபடி, கோ-கோ வுஷு ஆகிய விளையாட்டுப் போட்டிகள் திருச்சியிலும், பளு தூக்குதல், குத்துச்சண்டை, மேஜைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் மதுரையிலும்,
தடகளம், கைப்பந்து,ஹாக்கி ஆகிய போட்டிகள் திருவண்ணாமலையிலும், வில்வித்தை மற்றும் ஜுடோ ஆகிய போட்டிகள் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் – வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ. 350-ம் இரண்டாம் பரிசு ரூ. 250-ம் மூன்றாம் பரிசு ரூ.150-என பரிசுத் தொகையாக மொத்தம் ரூ. 2,56,800- வழங்கப்பட உள்ளது.
பரிசுத் தொகை அவரவர் வங்கி கணக்கில் மட்டும் தான் வரவு வைக்கப்படும். எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகள் வங்கி கணக்குப்புத்தக நகலினை கொண்டு வரவேண்டும்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் – வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ. 500-ம், இரண்டாம் பரிசு ரூ.300-ம், மூன்றாம் பரிசு ரூ.200-ம் வழங்கப்படும். வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர், வங்கியின் பெயர் மற்றும் கிளை, வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. (IFSC) குறியீட்டு எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.