Kolappotti National Integration Week Festival: Ammapalayam team won the first prize.

kolam பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், புதுவாழ்வுத் திட்டம் மற்றும் மாவட்ட சமூக நல துறை உள்ளிட்ட துறைகளால் இணைந்து நடத்தப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு வாரவிழா மாவட்ட சமூக நல அலுவலர் அ. தமீமுன்னிசா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமூக நல அலுவலர் பேசியதாவது:

நமது நாடு தேசிய ஒருமைப்பாட்டிற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கும் நாடு. நாம் ஒருவருக்கொருவர் சாதி, மத, இன வேற்றுமைகளைக் களைந்து அனைவரும் இந்தியர; என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும் என்பதை மனதில் உறுதியாகப் பதியவைத்துக்கொள்ள வேண்டும். எந்தச்சூழலிலும் மனிதநேயத்துடன் செயல்படவேண்டும். ஒருவருக் கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.

இவ்விழாவில் “நாட்டின் ஒருமைப்பாட்டில் பெண்களின் பங்கு” குறித்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட இயக்குநர் ச. துர்காசெல்வி பேசினார்.
“மகளிh; விழா” என்ற தலைப்பில் சமூக நலத்துறை மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வண்ண கோலப்போட்டி (ரங்கோலி) நடத்தப்பட்டது. இப்போட்டியில் அம்மாபாளையத்தை சேர்ந்த வான்முகில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு முதல் பரிசும், குன்னத்தை சேர்ந்த குறிஞ்சி மலர் மகளிர் சுய உதவிக் குழுக்கு 2ம் பரிசும், வெங்கலத்தை சேர்ந்த செந்தமிழ் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு 3ம் பரிசும், மேலமாத்தூரை சேர்ந்த முல்லை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு 4-ம் பரிசும் அறிவிக்கப்பட்டு, மாவட்ட சமூக நல அலுவலர் அ. தமீமுன்னிசா பரிசுகளை வழங்கினார்.

இவ்விழாவில் மகளிர் நலன், குழந்தைகள் நலன், கிராமப்புற மகளிர் மேம்பாடு, தூய்மை இந்தியா, தனிநபர் கழிவறை, பெண் சிசு கொலை மற்றும் குழந்தை திருமணம் தடுத்தல், வரதட்சனை தடுப்பு, மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்ற தலைப்புகளின் கீழ் சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டது.

இப்போட்டியில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன், புதுவாழ்வுத் திட்ட உதவித் திட்ட அலுவலர் முத்துவேல், மாவட்ட சமூக நல துறை அலுவலகப் பணியாளர்கள், மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!