Kootanchoru Monthly Magazine Launching Ceremony on behalf of Perambalur Kothukkari Hotel!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள, லக்சனா கிச்சன் கொத்துக்கறி ஹோட்டல் சார்பில், கூட்டாஞ்சோறு மாத இதழ் வெளியிடப்பட்டது. அது, மகளிர் தின சிறப்பு இதழாக வெளியிடப்பட்டது. கூட்டாஞ்சோறு என்னும் இதழ் முற்றிலும் உணவிற்கான மாத இதழ் கடந்த மாதம் அதன் முதல் பிரதி நக்கீரன்கோபால், கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி, எழுத்தாளர் கவிஞர் டாக்டர் பி அமுதா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் நமது நகரம் ஆசிரியர் ஆர் சரவணன் திரைப்பட இயக்குனரும் இசையமைப்பாளருமான எஸ் எஸ் குமரன் மற்றும் லக்ஷனா கிச்சன் கொத்துக்கறி நிர்வாக இயக்குனர் எஸ்.வி.ரிஷி தலைமையில் நடந்தது. அதன்
இரண்டாம் பிரதியாக மார்ச் மாத பதிப்பு வெளியீட்டு விழா பெரம்பலூரில் உள்ள லக்சனா பார்ட்டி ஹாலில், லக்ஷனா கிச்சன் கொத்துக்கறி நிர்வாக இயக்குனரும், கூட்டாஞ்சோறு பத்திரிக்கையின் ஆசிரியரும், நிறுவனருமான எஸ்.வி.ரிஷி தலைமையில் நடந்தது. அந்த பத்திரிகையின் இணை ஆசிரியர்கள் டிபி அஸ்வின்காந்த் மற்றும் நடிகர் ரமேஷ் மற்றும் நிருபர்கள் இன்ஜினியர் கே ஏ பாண்டி கண்ணன், பட்டிமன்ற பேச்சாளர் கயல்விழி ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினர். இதனைத் தொடர்ந்து விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சச்சுமா போதிபவன் கல்வி நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் பி தேவி பிரியா மற்றும் ஆர் சச்சுமா, சைதன்யா டெக்னோ இன்ஸ்டியூட்டின் நிர்வாக இயக்குனர் சரிதா மணிகண்டன், ஆர் கே ஆர் ஏஜென்சிஸ் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

செயல் டிவியில் குறலோசை என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தினமும் ஒரு குறலும் அதனுடைய பொருளும் என சிறுகதைகளுடன் கூடிய வரலாற்றுப் பதிவினையிட்டு பெரும் வரவேற்பினை பெற்ற முதுகலை ஆசிரியர் டாக்டர் துரை ரவி சித்தார்த்தனுக்கு திருவள்ளுவர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கூட்டாஞ்சோறு உணவிற்கான மாத பதிப்பினை துரை ரவிசித்தார்த்தன் வெளியிட மற்ற சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!