KPN Omni Bus Brakedown near Perambalur: Passengers Suffered with children 6 hours on Mid way!

சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் சுமார் 35 பயணிகளுடன் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

பேருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே நள்ளிரவு சுமார் 2.45 மணிக்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமான பேருந்தின் பின்புற டயர்கள் சாலை உராய்வில் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் பஞ்சர் ஆகின. ஓட்டுனர் பேருந்து அலுவலகத்திற்க தகவல் தெரிவித்துவிட்டு அசதியில் தூங்கி கொண்டிருந்தார்.

விடிந்தும் மாற்று டயரும் வரவில்லை, மாற்று பேருந்தும் வர காலதாமதமான காரணத்தினால், 4 கைக்குழந்தைகள் உள்பட 7 குழந்தைகளுடன் பயணிகள் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த சுற்றுக் காவல் துறையினர் சமாதானம் செய்தனர். பின்னர் காலை சுமார் 8.45 மணியளவில் மாற்றுப் பேருந்து திருச்சியில் இருந்து வந்தடைந்தது.

அதுவும், மதுரை வரை செல்லும் என்றும், அங்கு வேறு ஏற்பாட்டில் திருச்செந்தூருக்கு அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்து அழைத்து சென்றனர்.

பேருந்து பழுதாகி 6 மணி நேரத்திற்கு பிறகு வந்து அழைத்து சென்றதில் பயணிகள் அதிருப்தியில் சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!