Lawyers protest in Perambalur against central government’s law amendment! Ignoring court work!
மத்திய அரசு முப்பெரும் சட்டங்களில் திருத்தம் செய்ததை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று காலை ஆர்ப்பாட்டம், மாவட்டத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடத்தினர். பின்னர், நீதிமன்ற பணி புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் மாவட்ட தலைவர் வள்ளுவன் நம்பி பேசியதாவது:
மத்திய அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது இதனை திரும்ப பெற வேண்டும். தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முப்பெரும் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்துவோம், தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவோம், அதனை தொடர்ந்து அடுத்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட உள்ளோம்.
சட்ட திருத்தங்களை திரும்பப்பெறும் வரையில் தொடர் போராட்டங்களை மேற்கொள்வோம் என்றும், தமிழகத்தில் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்வதும் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது அதனை தடுப்பதற்கு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.