Leaders Thirumavalavan, Krishnasamy and Seeman are opposing the internal reservation of Arundhatiyar for political gain; Interview with Tamil Pulikal Katchi State Headquarters Secretary Mukhilarasan!
தமிழ்புலிகள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க நாளும், நவம்பர் 26 தமிழர்களின் எழுச்சி நாளாகவும், பிரபாகரன் பிறந்த நாளாகவும், தந்தை பெரியார் சாதியை பாதுகாக்கும் சட்டத்தை எரித்த நாளும், அம்பேத்கர் அரசியல் சட்டம் வகுத்த நாளும், சாதி ஒழிப்பே தமிழர் விடுதலை என்ற கொள்கையை சாதி ஒழிப்பு போராளியான பசுபதி பாண்டியன் தமிழ் புலிகள் கொடியை அறிமுகம் செய்து துவக்கிய நாளை முன்னிட்டு,
தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெ. கிஷோர்குமார்( எ) குரல் வள்ளுவன் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி, வேப்பந்தட்டை வடக்கு மாதவி, கீழக்குடிகாடு, ஆண்டிகுரும்பலூர், குரும்பலூர், செட்டிகுளம் ஆகிய கிராமங்கில் கொடி ஏற்றி வைத்தனர்.
மத்திய மண்டல செயலாளர் தோழர் போஸ், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அமரன், பி.ஆர்.ஓ வக்கீல் அருண், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் கர்ணன், கலியபெருமாள், வேப்பந்தட்டை செல்வக்குமார், வேப்பூர் சரவணன் உள்ளிட்ட பெரம்பலுர் மாவட்டத்தை சார்ந்த தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் தெரிவித்ததாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடவும், உச்ச நீதி மன்றம் வரை சென்று அருந்ததிய மக்களுக்கான உள் ஒதுக்கீடுக்காக போராடி மீட்டுக் கொடுத்த சமூக நீதி காவலர் கலைஞரின் கொள்கை வாரிசான முதல்வர் மு.க. ஸ்டாலினகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவருடைய கரத்தை தொடர்ந்து வலுப்படுத்த திமுகவுக்கு ஆதரவளிப்பது என்றும்,
அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை மீட்டு ஏழை அருந்ததியர் மக்களுக்கு விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை பட்டாக்களாக வழங்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை இந்திய அரசமைப்புச் சட்டம் 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்ட விவசாய நிலங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவித்து அங்கு செயல்பட்டு வரும் நச்சு எரிவாயு நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண்டும்.
நகர்ப்புற செய்திகளை அப்புறப்படுத்துகிறோம் என்கிற பெயரில் ஏழை மக்களை அங்கிருந்து விரட்டி அடிக்காமல் அவர்களுக்கு அந்தந்த இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்ற போல உள்ளது என்றும்,
இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும், தலித் மற்றும் தலித் அமங் என்ற பிரிவினர்கள் இருக்கிறார்கள். அதில் எல்லா மாநிலங்களிலும் தலித்துகளுக்கு உள்ளேயே தலித்துகளாக அடக்கப்பட்ட சமூக மக்கள் இருக்கிறார்கள். அப்படி கண்டறியப்பட்ட சமூகத்தில் ஒன்றுதான் அருந்ததியர்கள். இந்த அடக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டது தான் சிறப்பு சலுகையான முன்னுரிமை இட ஒதுக்கீடு.
ஆனால், தலைவர்கள் திருமாவளவன், கிருஷ்ணசாமி, சீமான், ஆகியோர் அரசியல் ஆதாயத்திற்காக இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள். அப்போதைய கலைஞர் தலைமையிலான அரசு ஜனாதன் கமிட்டி அமைக்கப்பட்டு ஆறு மாத காலம் ஆய்வு செய்து இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி, உரிய விவாதம் நடத்தி, எதிர்ப்புகளை இல்லாத நிலையில் , அனைத்து சட்ட விதிகளுக்கும் உட்பட்டுதான் வழங்கியிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கியது செல்லும் என்று உறுதிப்படுத்தி உள்ளது. தலைவர்கள் எதிர்ப்பது செல்லுபடியாகாது, அவர்கள் நினைப்பதும் நடக்காது. இந்த சட்டம் உறுதியாக உள்ளது.
இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு தேசிய அளவிலே அவர்கள் ஒரு பெரிய அணியை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். நாங்கள் அதற்கு மாற்றாக இந்தியா முழுவதும் அருந்ததியர்கள் போன்று பாதிக்கப்படுபவர்களை ஒன்று திரட்டி ஒரு அணியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தை தாண்டி அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.