பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் இளங்கோவன்.
இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 18.12.15 முதல் 20.12.15 வரை நடைபெற்ற மாநில அளவிலான மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதலில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 02.03.16 முதல் 06.03.16 வரை கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள சாமுண்டி விகார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காவல் துறை, இராணுவம், கடலோர காவல், விமானம் மற்றும் இரயில்வே துறையினர் மற்றும் பல துறையினர் கலந்து கொண்ட தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு போட்டியில், தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில், வெள்ளிபதக்கம் பெற்று பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும், இதனை தொடர்ந்து காவலர் இளங்கொவன் வருகின்ற ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ள ஏசியன் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் பெற்றதற்காக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா காவலர் இளங்கோவனை பாராட்டினார்.