Maha Siddha Welfare Trust on behalf of the Chief Minister to receive and feed ko pooja
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நலம் பெற வேண்டி இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம், அன்னதானம், வஸ்திரதானம் அறக்கட்டளை நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கேரளா லட்சத்தீவு கடன் வசூல் தீர்ப்பாய முன்னாள் நீதிபதி சுப்பிரமணியன், புதுச்சேரி – காரைக்கால் மாவட்ட நீதிபதி (ஓய்வு) நா.வைத்தியநாதன், கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா மற்றும் சீர்காழி ஒளிலாயம் ராஜேந்திரன், நாகர்கோவில் சன்மார்க்க சங்கம் ஆர்.ரகுராம், காந்தி கனகராஜ், கடலூர் – வடலூர் அம்மா பேரவை கலியமூர்த்தி, வாளாடி சமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.