Marry to 16-year-old girl was detained near In Perambalur
பெரம்பலூர் அருகே 16 வயது பெண் குழந்தைக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் !
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சிக்கு கொட்டாரகுன்று கிராமத்தை சேர்ந்த அலமேலு – சேகர் ஆகியோரின் 16 வயதான மகளுக்கு திருமணம் நடைபெறுவது குறித்து சம்மந்தப்பட்ட சமூக ஆர்வலர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அதனை, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்மந்ப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில், நேற்று காலை 10.30 மணியளவில் சமயபுரம் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக சமூகநலத்துறை அலுவலர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த குழந்தையினை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் நேற்று ஒப்படைத்து பின்னர், குறுகிய கால தங்கும் மகளிர் இல்லத்தில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 481 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை திருமணங்களை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு இன்றியமையாததாகும். எனவே, குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணிற்கும், பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணாண 04328-224122 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
குழந்தைத் திருமணம் நடைபெறாத மாவட்டமாக நமது பெரம்பலூர் மாவட்டத்தை மாற்ற பொதுமக்கள் தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டும், என மாவட்ட சமூக நல அலுவலர் அ.தமீமுன்னிசா தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497