Marvel raised pavilion stone bell noise! In Perambalur at the surprise !! Video Link
தட்டினால், மணி ஓசை எழுப்பும் அதிசய கல் ! பெரம்பலூர் அருகே ஆச்சர்யம் !! வீடியோ இணைப்பு
மனிதன் இரை தேடியதும், நாகரீகத்தை கண்டறியத் துவங்கிய கிடைத்த முதல் ஆயுதம் கல்லே! காலமே, கற்காலத்தில் தான் துவங்குகிறது.
மனிதனுக்கும் கற்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்ததே அணைவரும் அறிந்ததே, வீடு, கோயில் என கட்டடக் கலையை பறை சாற்றுவதும் கற்களே, ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நீடித்து வருவது கல்வெட்டுக்களாக நிற்பது கற்களே என்பதில் ஐயமில்லை.
பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமம், இரட்டை மலை சந்து உள்ளது. அது வடபுரம் பச்சைமலையும், தென்புறம் ஒருத்தா மலையும் உள்ளது. இந்த ஒருத்தா மலையில் மேல் மலையின் கீழே கிடக்ககும் கற்பாறைகளின் குவியல் உள்ளது. அதில் உள்ள ஒரு கற்பாறை ஒன்றை கையாலோ, கற்களை கொண்டு ஓங்கி அடிக்கும் போது கோயில் மணி ஓசை போன்று சத்தமிடுகிறது.
நமது முன்னோர்கள் கோயில்களில் விதவிதமான ஒலி ஓசை எழுப்பும் கலை நயமிக்க தூண்களை வடிவமைத்துள்ளனர். உதரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டப தூண்கள், பெரம்பலூர் அருகே உள்ள வெங்கனூர் விருத்தாசல ஈஸ்வரர் கோவிலிலும் இது போன்ற ஒலிக்கும் ஓசை உடைய கற்கள் கொண்டு சிலைகள் சிறந்த வேலைப்பாடுகள் செய்ய்பட்டுள்ளது.
ஒலிக்கும் ஓசை உடைய கற்கள் காணுவது அரியதாக உள்ளது. இது போன்ற கற்கள் அரிய வகையினை சேர்ந்தவை. இவை ஒலிக்கும் தன்மையுடைய கற்களை அரசு பாதுகாக்க செய்வதோடு மட்டுமில்லாமல் புவியியல், வரலாறு பயிலும் மாணவர்கள் காணும் வகையில் தடத்தை சீரமைத்து கொடுத்து அரசு உதவ வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து ஹைதாரபாத்தில் இருக்கும் புவியியல் விஞ்ஞானி ராஜு தெரிவித்தாவது; அந்த வகை பாறையில் உலோக தனிமங்கள் அதிகளவில்க லந்து இருக்கும், Petrology துறையினர் முறையாக ஆய்வு செய்து பார்த்தால் இது குறித்து விரிவான தகவல் கிடைக்கும் என தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு : இந்த ஒலிக்கும் மணிக்கல்லை காண தடம் சரியில்லாததால், மலையேற யாரும் முயற்சிக்க வேண்டாம். முற்புதற்களில் நுழைந்து பயணம் செய்வது என்பது மிக கடினம்.