Masked thieves rob jewelery, car at knife point near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (52), இவர் பெரம்பலூர் – துறையூர் சாலையில், உள்ள டாஸ்மாக் கடை அருகே சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மனைவி ராஜலட்சுமி (49), மகள் ரம்யா (32), மகன் விக்னேஷ் (27) ஆகியோர் உள்ளனர்.

ரம்யாவுக்கு சரவணன் என்பவருடன் திருமணமாகி சரவணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் பெற்றோருடனே தங்கி உள்ளார். தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு வழக்கம்போல் வீட்டை உள் தாழ்ப்பாள் போட்டு தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2:30 மணி அளவில் 5 மர்ம நபர்கள், வீட்டின் கதவை எட்டி வைத்து உள் தாழ்ப்பாளை உடைத்து கீழ் அறையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, கையில் வைத்திருந்த இரும்பு ராடால், முதுகில் தாக்கினர். பின்னர், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்த சமயத்தில், சத்தம் கேட்டு மேலே தூங்கிக்கொண்டிருந்த ரம்யா கீழே வர அவரிடமிருந்து 3 பவுன் தாலி செயின், ஒன்றரை பவுன் மதிப்புள்ள 2 மோதிரங்கள் என மொத்தம் நான்கரை பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் ஒன்றையும் கடத்திக் கொண்டு தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், மோப்பநாய், மற்றும் தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியில் ஸ்கூட்டியில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் கொள்ளையர்கள் தாலிசெயினை பறித்ததில் பெண் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதோடு, அந்த பகுதி தற்போது கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெரம்பலூர் நகரப் பகுதிக்கு கொள்ளை குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசாரை வழங்குவதோடு, அம்மாபாளையத்தில் கிடப்பில் உள்ள புதிய காவல் நிலைய திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!