In Perambalur, the oversight meeting of the project to form the Central Government Agricultural Producers Company
விவசாய உற்பத்தியாளர் கம்பெனி உருவாக்குதல் திட்டத்தின், பெரம்பலூர் மாவட்ட அளவிலான கண்கானிப்பு குழு கூட்டம் கலெக்டர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அதிகபடியாக உற்பத்தியாகும் மற்றும் அதிக பரப்பளவு கொண்ட விளைபொருட்களை தேர்ந்தெடுத்து நபார்டு வங்கிக்கு பரிந்துரைக்க ஆலோசனை செய்யப்பட்டது.
பெரம்பலூர; மாவட்டத்தில் வேளாண்மைதுறை சார;பில் அதிக பரப்பளவில் மக்காசோளமும், தோட்டக்கலைத்துறை சார;பில் சின்ன வெங்காயமும் தேர்ந்தெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உருவாகும் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கவும், விளைபொருட்களின் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் பெரம்பலூர் மாவட்டத்திலேயே உற்பத்தி செய்திடவும், மக்காசோளத்தின் மூலம் ஐஸ்கிரீம் கோன் உருவாக்கும் தொழில் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பும், தேசியமையமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவைபடும் மூலதன பொருட்களை வாங்க மற்றும் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி பொருட்களுக்கு இணையாக பிணையம் ஏதும் இல்லாமல் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
மத்திய அரசு நாடு முழுவதும் 10,000 விவசாய உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க 2019-20 முதல் 2023-24 வரை ரூ.6866 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கண்கானிக்க கண்கானிப்பு குழு அமைத்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல துறை அலுவர்கள் பலர் கலந்துகொண்டனர்.