Medical shopkeeper who refused to pay the bribe: Death in the attack of the robbers!
பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்த மாறப்பன் மகன் நாகராஜன் (44). மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் கடை மூடும் நேரத்தில், அதே ஊரில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் எழுத்தாணி (எ) பிரபாகரன் (29)
மற்றும் ஆனந்த் மகன் ரகு (எ) ரகுநாத் (23) ஆகிய இருவரும் மெடிக்கல் கடை நடத்தி வரும்
நாகராஜிடம் இருவரும் மிரட்டி பணம் பெற்றதாகவும், அதே போல் நேற்றிரவும் மாமூல் கேட்டு பணம் மிரட்டி உள்ளனர். மாமூல் தர மறுத்த நாகராஜன் இது குறித்து ரவுடிகளின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் நாகராஜன் வீட்டிற்கு சென்று மருந்து வேண்டும் என அழைத்து ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் வைத்து சரமாரியாக ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். வீட்டிற்கு வந்த நாகராஜனுக்கு மூக்கில் ரத்தம் வந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பயந்த சுபாவம் கொண்ட மெடிக்கல் கடைக்காரரிடம் மாமூல் பெற்ற ரவுடிகள் இருவரும் போலீசில் புகார் கொடுத்தால் சாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளிவிடுவோம், ஜாமீன் கிடைக்காது, அப்புறம் கடையை திறக்க முடியாது என மிரட்டியதால் மெடிக்கல் கடை உரிமையாளர் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு, இது குறித்து போலீசில் புகார் கொடுக்காமல் இருந்ததாகவும் அதனை நல்வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு பணம் பெற்று வந்துள்ளனர். ரவுடிகள் இருவரும் நாகராஜன் பணம் தர மறுத்த போது தாக்கியதால் அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகராஜனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கிடத்தி உள்ளனர். ரவுடிகள் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.