Merchants’ Association passes resolution demanding canal facility from Mettur to Sripuranthan via Perambalur!

பெரம்பலூரில் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 25ம் ஆண்ட வெள்ளி விழா, மாவட்ட பொதுக்குழு கூட்டம், 42 வது வணிகர் தின மாநாடு விளக்க கூட்டம் ஆகிய முப்பெரும் விழா அஸ்வின்ஸ் மீட்டிங் ஹாலில் நேற்று மாநில கூடுதல் செயலாளரும், மாவட்ட தலைவருமான சண்முகநாதன் தலைமையில் நடந்தது. ஓட்டல் சங்க மாவட்ட கவுரவ தலைவர் அஸ்வின்ஸ் கணேசன், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்பி. ஆதர்ஷ் பசேரா, ரோவர் குழுமங்களின் மேலாண் தலைவர் வரதராஜன், மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு, திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பேசினர். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்தைம், குடிநீர் வசதியையும் பெருக்கும் வகையில் மேட்டூரிலிருந்து வாழப்பாடி, ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர், ஸ்ரீபுரந்தான் வரை வாய்க்கால் வசதி செய்து நிரந்தரமாக தீர்வு காண வேண்டும். பெரம்பலூரில் விரைவில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும், நீண்ட கால கோரிக்கையான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதர், விஜயகுமார், சிவக்குமார், பாலாஜி, முத்துக்குமார், குறிஞ்சி சிவக்குமார், ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநில துணை தலைவர் இளங்கோவன் வரவேற்றார். மாநில இணை செயலாளர் ரவிசுந்தரம் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!