Minister Sivasankar to open dishonest school in Ariyalur!

பள்ளிக்கூடம் பணம் பண்ணும் வணிக நிறுவனம் அல்ல. அது, அறியாமையை அகற்றி அறிவை வளர்க்கும் இடம். ஆனால், இன்று பெரும்பான்மையான பள்ளிக்கூடங்கள், பணம் காய்க்கும் மரங்களாக மாறி வருகின்றன. அதற்கு முழு பொறுப்பு அரசையே சாரும்,

அரசியலமைப்பு சட்டம் சரியாக இருந்தும், சட்டப்படி ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வில்லை.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்ற பாரதியின் வரிகளை மெய்பித்து காட்டியவர் ஐயா பெருந்தலைவர் காமராஜர். அவர் தோற்றுவித்த பள்ளிகளே பலரை கல்வியறிவு பெற்றவர்களாகவும் முற்போக்கு சிந்தனைவாதிகளாகவும் மாற்றி உள்ளன. இன்றும் அவைதான் தலைநிமிர்ந்து நிற்கின்றன.

ஆனால், இன்று ஆங்கில அறிவு அவசியம் என்பதை புரிந்து கொண்ட தனியார் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியை போதிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அரசும் ஆங்கில வழி பள்ளிகளை திறப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் பெரும்பான்மையானவர்கள், ஏதாவது அரசியல் பின்புலமோ, அல்லது மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சியாகவோ, நேரடி அரசியல்வாதிகாளாக உள்ளனர்.

உதாரணமாக, பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் (தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள்), பி.ஜே.பி சிவசுப்பிரமணியன், மதிமுகவில் உள்ள ரோவர் வரதராஜன், ஜெகத்ரட்சன், கே.என். நேரு, இவர்கள் நேரடியாக இருந்தாலும், இன்னும், பலர் பினாமி மற்றும் உறவினர்கள் பெயர்களில் கல்விக் கூடங்களை நடத்தி வருகின்றனர். இது நாடு முழுக்க நடந்து வருகிறது.

இவர்கள் தொடங்குவதற்கு முன்பு இருந்த பள்ளிகள் எல்லாம், கார்பரேட் நிறுவன நோக்கம் இல்லாமல், கல்வியை குறைந்த கட்டணத்தில் போதித்தன. ஆனால், தற்போதைய பகட்டு தனியார் பள்ளிக் கூடங்களில் எல்.கே.ஜி. முதல் 12 வகுப்பு பயின்ற மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே அதிகம்.

இன்னும் பல பள்ளிகள் சேவை நோக்கத்துடன் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை பெற்றுக் கொண்டு சிறந்த கல்வியை வழங்கி கிராமப் புறங்களிலும், ஏழை மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கின்றனர். அவர்களால் இன்னும் வளர முயடிமால் தத்தளித்து கொண்டு உள்ளனர்.

ஆனால், சில கல்வி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் நிலம் வாங்கி அடுக்கடுக்கான கட்டிடங்களை கட்டி வரக் காரணம், சட்டத்திற்கு புறம்பாக கட்டணம் வசூலிப்பதுதான். கருப்பு பணம் அதிகளவில் உள்ளவர்களை பார்ட்னர்களாக சேர்த்துக் கொள்வதும், அதோடு, யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என முடிவு செய்து கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்குகின்றனர். அதில், நீதித்துறை, காவல் துறை, வருமான வரித்துறை, வணிகவரித்துறை, வருவாய் மற்றும் நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை வைத்து சரிகட்டுகின்றனர். இதனால், அவர்களுக்கு பிரச்சனை வந்தாலும் இவர்களை காப்பாற்றி விடுவார்கள்.

அரசு பள்ளி விழாக்களை விட தனியார் பள்ளிகளுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அதிக ஆர்வம் காட்டுவது, ஏன் என்றால், அங்கு கொடுக்கப்படும் நினைவு பரிசுதான், அது பவுன் தங்கம், வெள்ளி, லட்சக்கணக்கில் ரொக்கப் பணப் பரிசுகளாக இருக்கலாம் என்பதுதான் காரணம். மேலும், வண்டு, சிண்டு, துண்டு, லட்டர் பேடு கட்சிகளும் தங்களது பங்கிற்கு இனாம் ( நன்கொடை ) பெறுவதே காரணம்.

பெரம்பலூரில் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் படித்த மாணவர்கள், கல்வியின் தரத்திற்கேற்ப கட்டணம் நிர்ணயம் இல்லை என்பதாலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்ததால், மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து விட்டது.

பெரம்பலூில் நகரின் மையத்தில் அமைந்து இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரமான ஆசிரியர்களை கொண்டு, பாடங்கள் நடத்தியதாலும் கூட்டம் குவிந்தது. கொரோனாவிற்கு பின்னர் கட்டண பிரச்சனை வந்ததால், நகரின் சிறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர்.

அதில் ஒரு மாணவனின் பெற்றோர் ஒருவர் தீக்குளிக்க பெட்ரோல கேனுடன் பள்ளிக்கு சென்று விட்டார். விசாரித்த போது, (RTE) – கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பயிலும், மாணவர்களிடம், எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது என அரசு விதிகள் இருந்தும், அதை மீறி நடத்தாத பாடங்களுக்கு கட்டணம் கேட்டதால், தீக்குளிப்பதாக காவல் துறையில் தெரிவித்தார். காவல் துறையினர் கொடுத்த அறிவுரையின் பேரில் பள்ளி நிர்வாகம் அவரிடம் எந்தவித கட்டணத்தையும் கேட்காமல் உள்ளது.

கோல்டன் கேட்ஸ் பள்ளி, வரும் மே.15 அன்று, அதன் மற்றொரு கிளையை அரியலூரில் பிரமாண்டமாக எட்டி மரமாக உருவாக்க உள்ளது. அறிவை கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடம், மக்களின் அறியாமையை பயன்படுத்தி பணம் பார்க்கும் பள்ளிக்கூடமாக மாறிவிட்டது. அதற்கு முற்றிலும், உடந்தையாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள், அதிகாரிகள்தான்.

யாரை பிடித்தால் சிறப்பாக பள்ளிக்கூடத்தின் பகட்டை காட்ட முடியும் என நினைத்த பள்ளி நிர்வாகம், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கரை வைத்து வரும் மே.15 ம் தேதி திறக்க உள்ளது. இந்த பள்ளியில் பெரம்பலூரை போன்று அரியலூர் அநிநியாய கட்டண கொள்ளையை எதிர்த்து பெட்ரொல் கேனுடன் எத்தனை பெற்றோர்கள் செல்ல போகிறார்கள் என்பது தெரியவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்த அனில்மேஷராம் சத்துணவு மையங்களில் ஆய்வு செய்த போது கடைக்கோடி பணியாளர்களான சமைப்பவர்களை சஸ்பெண்ட் செய்து நேர்மையானவராக காட்டிக் கொண்டார். ஆனால், இந்த பள்ளிக்கு என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அமைச்சர்களுக்கு மக்கள் விடுக்கும் கோரிக்கை:

ஹோட்டல், டீக்கடைகளுக்கு சென்றால், விலைப்பட்டியல், பில் கொடுப்பது போன்று,

அனைத்து தனியார் பள்ளிகளிலும், அரசு நிர்ணயித்த கட்டணம் குறித்த அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். சிறப்பு வகுப்பு என்ற பெயரிலும் கட்டாய கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.

வேலை ஒன்று, சம்பளம் வேறு என இல்லாமல், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகராக சிறப்பாக பாடம் நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும்.

பல ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் மிக சொற்ப சம்பளத்திற்கு பணியாற்றி தங்கள் வாழ்வை வாழாமல் தொலைத்து வருகின்றனர். அது வேதனைக்குரியதாக உள்ளது. ஆனால்,கல்வி கூடங்கள், கட்டடங்கள் கட்டுவதையும், பல்கலைக்கழகமாக மாற்றிக் கொள்வதில் எந்த நிறுவனமும் பின்வாங்கவில்லை.

அரசு பள்ளிகள் மீது, சேர்க்கையை குறைக்கும் வகையில், அரசு பள்ளிகள் மீது ஒழுங்கீன செயல்களை அவதூறு பரப்புவதை தடுக்க வேண்டும் என்பதோடு,

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்களித்த பொதுமக்களின் நலன் கருதி, வரும் கல்வியாண்டு முதல் கோல்டன் கேட்ஸ் உள்பட அனைத்து தனியார் மற்றும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் குறித்து அறிவிப்பு பலகையை வைத்து கல்வி கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!