N. Balakrishnan is the new disabilites welfare officer in Perambalur district பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலராக இதுநாள் வரை பணியாற்றி வந்த சு.இராமகிருஷ்ணன் பணிமாறுதலில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த நா.பாலகிருஸ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.
புதிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக நியமணம் செய்யப்பட்டுள்ள நா.பாலகிருஸ்ணன் நேற்று பதவி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
புதிதாக பதவியேற்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.