Namakkal district in eastern DMK executive committee meeting tomorrow!
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்கு கூட்டம் நாளை 13ம்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்க மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நடைபெறுகிறது.
முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
வருகிற 18ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
எனவே மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு,பொதுக் குழு உறுப்பினர்கள்,முன்னாள் எம்எல்ஏக்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட அளவிளான சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.