National People’s Court at Perambalur; 577 cases settled; Rs. 4 crores 23.68 lakh orders were issued.
பெரம்பலூரில், தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் இன்று நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொறுப்பு ) பி.இந்திராணி தலைமையில் நடந்தது. பெரம்பலூர் சார்பு நீதிமன்றம் நீதிபதி எஸ்.அண்ணாமலை, மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆர்.ராதாகிருஷ்ணமூர்த்தி ஒரு குழுவாகவும் , மேலும், பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி (பொறுப்பு ) குன்னம் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.கவிதா மற்றும் மூத்த வழக்கறிஞர் எம். நல்லுசாமி தலைமையில் ஒரு குழுவாகவும் மற்றும் வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதித்துறை நடுவர் எஸ்.பி. பர்வதராஜ் ஆறுமுகம் தலைமையில் ஒரு குழுவாகவும் மற்றும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியுடன் ஒரு வழக்கறிஞர் ஒரு குழுவாகவும் அமைக்கப்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் நீதிமன்றங்களில் உள்ள வருவாய்துறை. மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாரக்கடன் வழக்குகள் உட்பட சுமார் 1500- க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைத்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேசி வழக்குகள் முடிவுற்றது.
மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட இழப்பீட்டுத் தொகை ரூ.4,23,68,000/- (நான்கு கோடியே இருபத்து மூன்று இலட்சத்து அறுபத்து எட்டு ஆயிரம் ரூபாய்) தீர்வுகள் காணப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பபட்டது. 577 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.
இதில் வழக்கறிஞர்கள், காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், வழக்காடிகளும். எதிர் வழக்காடிகளும் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை , பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமாகிய (பொறுப்பு ) சி.சங்கர் செய்திருந்தார்.