National Voters’ Day to raise awareness among students of college competitions

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் துவங்கி வைத்தார்.

வாக்களிப்பது நமது ஜனநாயக கடமையாகும். 18 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்திடும் வகையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்திடும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் கட்டுரைப்போட்டி, வினாடிவினா போட்டி, கோலப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாளை நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற பல்வேறு போட்ப்பரிவுகளில் பேச்சுபோட்டியில் 11 நபர்களும், கட்டுரைப் போட்டிகளில் 27 நபர்களும், ரங்கோலி கோலப் போட்டியில் 22 நபர்களும், வினாடி வினாப்போட்யில் 38 நபர்களும் கலந்து கொண்டனர்.

மேலும், தேசிய வாக்காளர் தினமான நாளை காலை 10 மணியளவில் கல்லூரி மாணவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்துகொள்ளும் பேரணி பாலக்கரையிலிருந்து நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மாவட்ட ஆட்சிப் பணியாளரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.மாரிமுத்து, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் செல்வராஜ், போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வ.சந்திரமவுலி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!