Near plea to cranky when Kari Feast sheep sheaves: the death of the worker on the Knife punched
பெரம்பலூர் அருகே கறிவிருந்திற்கு ஆடு அறுத்த போது, கால் இடறி தொழிலாளி பள்ளத்தில விழுந்த போது கையில் வைத்திருந்த கத்தி கழுத்தில் குத்தியதில் பரிதாபமாக தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் மகன் பெரியசாமி (வயது 47). கூலித் தொழிலாளி. சுமார் 15 நாட்களுக்கு முன்பு எளம்பலூரில் இறந்த போன ஒருவருக்கு துக்க அனுசரிப்பு நிகழ்ச்சி முடிந்து உறவினர்களால் கறிவிருந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்த திட்டமிடடனர்.
அதற்கு நேற்று மாலை ஆடு அறுத்து கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த பெரியசாமியும், உறவினர்களில் ஒருவராக ஆடு அறுத்து கொண்டு இருந்தார், கால் தவறி அருகில் உள்ள சிறிய பள்ளத்தில் விழுந்தார். அப்போது அவர் கையில் இருந்த கூர்மையான கத்தி பெரியசாமியின் கழுத்தில் குத்தியது. இதில் கழுத்தில் ரத்தம் பீறிட்டது.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பெரியசாமியை முதலுதவி செய்து அருகே உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவரின் உயிர் பிரிந்தது. இது குறித்து அவரது மனைவி சிந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்தவரின் உடல், உடற்கூறு ஆய்வு மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது.