Nutritional staff demonstrated in Perambalur
பெரம்பலூர் : பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்தது.
அதன் பேரில், அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் முன் இன்று மாலை சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர்ஆகிய ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், 10 முதல் 30 ஆண்டுகள் வரை பணி முடித்த நபர்களுக்கு தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும், சமையலர் மற்றும் உதவியாளார்களை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்,
7வது ஊதியக்குழுவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கி சட்டரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
காலப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், விலை வாசிகளுக்கு ஏற்ப மாணவர்கள் மானியத்தொகை தலா ரூ5 வீதம் வழங்க வேண்டும், சமையல் அமைப்பாளர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.