Of mourning near in Perambalur Diwali: Sugarcane farmers drove the black flag on houses.
கசக்கும் கரும்பு விவசாயிகள் வாழ்க்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் கரும்பு நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து பல்வேறு கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே எறையூர் கிராமத்தில் உள்ள நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையின் 2015-2016 அரவை பருவத்திற்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகை 53 கோடி ரூபாய் வழங்காததை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுகுடல், ஆண்டிக்குரும்பலூர், முருக்கன்குடி உட்பட 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் கரும்பு விவசாயிகள் தங்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றி தீபாவளி பண்டிகையை துக்க தீபாவளி பண்டிகையாக அனுசரித்து வருகின்றனர்.
இதனை அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும்.
தவறினால் வரும் 9ந்தேதி கரும்புகோட்ட அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்திலும், தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்திலும் ஈடுபட போவதாக கரும்பு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.