On behalf of the farmers, union representatives thank the Chief Minister of Tamil Nadu for permission to add silt in lakes, ponds, ponds and canals!
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள். கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல் மண். களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்த நிலையில், வேளாண் பெருமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன் பெற்றிட இயலாத சூழ்நிலை இருந்தது. தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க இயலும். இவ்வாறு மண்எடுத்து விவசாயப் பயன்பாட்டிற்காக பயன்படுத்திட விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் பல வரப்பெற்றதன் அடிப்படையில்,
தற்போதுள்ள விதிகளில், விவசாய பயன்பாட்டிற்கும். பானைத் தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளிலிருந்து மட்டுமே மண் எடுக்க அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால், பல தகுதியான பயனாளிகளுக்கு தேவையான மண் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், மேற்கூறிய பயன்பாடுகளுக்கு அனுமதி பெற சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்க இயலும். இதனால், பயனாளிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதனை களையும்வகையில், சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டிற்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும், இது மட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் உத்தரவு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாநிலத்தில் உள்ள விவசாயிகள் சார்பில் மாநில விவசாய சங்கத்தின் நிர்வாகிககள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில விவசாயிகள் சங்க செயலாளர் ஆர். ராஜாசிதம்பரம் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர், விவசாயிகளுக்கு எளிதாக வண்டல் மண் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. கிராம மக்களிடையே தொடர்புடைய வருவாய் துறை அதிகாரிகள் மூலமாகவே மிக எளிதாக களி மண், வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்றும், எங்களுக்கு அருகாமையில் உள்ள ஏரிகளிலே மண் எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மழைக்காலத்தில் விவசாயிகள் மண் அள்ளும் பொழுது நீர் தேங்குவதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும், அனுமதியை எப்படி வாங்குவது என்று தெரியாமல் இருந்த இந்த நேரத்தில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகளை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. இந்த உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு மிக்க நன்றி என தெரிவித்தார்.
திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு மாநில விவசாயிகள் சங்க துணைத்தலைவர் என்.செல்லத்துரை தெரிவித்தாவது:
விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான மண் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தோம், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வண்டல் மண், களிமண்களை எடுத்தால் தான் ஏரிகளை ஆழ படுத்த முடியும் நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த முடியும், வண்டல் மண் களிமண் எடுக்க பழைய முறைப்படி இலவசமாகவும், எளிதாகவும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என நீண்டநாள் கோரிக்கையாகவும் வைத்திருந்தோம், வண்டல் மண், களிமண் எடுப்பதற்கு தற்போது அதிக நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நிறைய விவசாயிகள் மண் எடுக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகியிருந்தோம்,
இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்ற உத்தரவாகும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள், பெரம்பலூர் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும், மழை காலங்களில் ஏரிகளில் அதிக நீரை சேமித்து வைக்க இயலாமல் இருந்தன.
இந்த அறிவிப்பு விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும், நல்ல முறையில் பயிர் செய்வதற்கும், அதிக மகசூல் பெற்று விவசாயம் செழிப்பதற்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அழிக்ககூடிய, விவசாயிகளின் வாழ்விற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக திகழும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனைத்து விவசாயிகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்தார்.