On behalf of the government to reveal the talents of artisans web
art
தமிழகத்திலுள்ள அனைத்து கைத்திறன் கைவினைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பக்கங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதில் கைவினைஞர் மற்றும் அவர்களது திறமைகள் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். இதன்மூலம் கைவினைஞர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் அரசின் கவனத்திற்கு வருவதுடன் சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்றடைய வழிவகை செய்யப்படும்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கைத்திறன் கைவினைஞர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, இந்நிறுவனத்தின் சார்பில் கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் கைவினைஞர் மற்றும் அவர்களது திறமை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக உரிய படிவத்தினை இந்நிறுவனத்தின் http://www.tnhdcltd.com லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 759, அண்ணா சாலை, சென்னை – 600 002 என்ற முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!