Operation on the wartime grounds to get rid of drinking water in Perambalur district: Collector Information
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 116 வழியோர கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் கிடைக்கும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று திருச்சி மாவட்டம் தாளக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:
பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 116 வழியோர கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் கிடைக்கும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டு வருகின்றது.
இத்திட்டத்திற்காக திருச்சி மாவட்டம் தாளக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் 6.00 மீட்டர் விட்டமுள்ள நீர் சேகரிப்பு கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வருகின்றது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சியிலுள்ள 49,500 மக்களுக்கு நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட 2.44 மில்லியன் லிட்டரில் 2.00 மில்லியன் லிட்டரும், குரும்பலூர் பேரூராட்சியிலுள்ள 12,136 மக்களுக்கு நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட 0.85 மில்லியன் லிட்டரில், 0.30 மில்லியன் லிட்டரும், 116 வழியோர கிராம குடியிருப்புகளிலுள்ள 1,01,987 மக்களுக்கு நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட 5.40 மில்லியன் லிட்டரில், 3.74 மில்லியன் லிட்டரும் என மொத்தம் நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட 8.69 மில்லியன் லிட்டரில், 6.04 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
மேற்படி ஆழ்த்துளை கிணறுகள் மற்றும் நீர் உறிஞ்சு கிணற்றின் இணைப்பு குழாய்கள் மற்றும் மின் ஒயர்கள் அனைத்தும் கொள்ளிடம் ஆற்றில் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கின் காரணமாக பழுதடைந்துள்ளதாலும், தலைமை நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் நீரூற்று அளவு குறைந்துள்ளதாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட இயலவில்லை.
எனவே உடனடியாக தேவையான எண்ணிக்கையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேற்படி கூட்டுகுடிநீர் திட்டத்தில் நிர்ர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, என தெரிவித்துள்ளார்.
இவ்வாய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர்கள் சக்திவேல், சிவபிரகாசம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத், இளநிலைப் பொறியாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.