Organic Horticulture Crop Cultivation Gifts for Farmers: Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறப்பாக செயல்படும் இயற்கை விவசாயிகளை தேர்வு செய்து மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
பங்கேற்பாளர்கள் அனைவரும் விவசாயிகளாக இருப்பதோடு, இயற்கை வேளாண்மை திறன்பட செய்து கொண்டிருப்பதுடன் Validity Scope certificate பெற்றிருத்தல் வேண்டும். மேலும், மாவட்ட அளவிலான தேர்வு குழுவிற்கு பங்கேற்பாளர்கள் தனது சாதனையை நியாயமான முறையில் விளக்கிட வேண்டும்.
மாநில அளவில் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/-ம், இரண்டாவது பரிசாக ரூ.60,000/-ம், மூன்றாவது பரிசாக ரூ.40,000/-ம் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது விவரத்தினை உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பதிவு செய்த விவசாயிகள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு கட்டணமாக ரூ.100/-ஐ செலுத்தி பங்கேற்பிற்கான விண்ணப்ப படிவத்தினை (இணைப்பு – II) பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.