Ozone Day at Elumur Government High School
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.
வரும் செப். 16. அன்று ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு எழுமூர்அரசு உயர் நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள் ஓசோன் படலம் பற்றி பேசினார்கள்.
மேலும், மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, வினாடி வினா, ஓவியப்போட்டி போன்ற ஓசோன் படலம் பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டது.
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி ஓசோன் படலம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் ஓசோன் படலம் பாதுகாக்கப்படும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிறந்த நாட்களுக்குப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவேண்டும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகளும், பனை விதைகளும் விதைக்கப்பட்டது.