#Pensions will be given the grace not beg!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஓய்வூதியர் தின விழா கூட்டம், தமிழ்நாடு அனைத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்டத் துணைத்தலைவர் பி.கிருஷ்ணசாமி, வரவேற்றார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற வருவாய்த் துறை உயர்நிலை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் டீ.வீரமணி துவக்கி வைத்தார். தமிழ்நாடு போக்குவரத்துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளார் இரா.முருகேசன் கருத்துரை வழங்கினார்.
கூட்டத்தில், ஓய்வூதியம் என்பது அரசின் கருணையால் அளிக்கப்படும் பிச்சையல்ல, மாறாக பணிக்காலத்தில் கடுமையாக வியர்வை சிந்தி உழைத்த அந்த உழைப்பிற்கு கொடுபடாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியமே ஓய்வூதியம்.
பணிக்காலத்தில் எப்படி ஒரு ஊழியன் கவுரமாக பணியாற்றினானோ அப்படியே ஓய்வு பெற்றதும் வாழ வேண்டும். ஆகவே, பணிக்கு அமர்த்தியவரின் இன்ப இச்சையை பொறுத்தோ, கருணைப் பொருளோ அல்ல.
அரசியல் சட்டம் ஷரத்துகள் 309 மற்றும் 148(5) ன் படி ஓய்வுதியர்களுக்கு அளிக்கப்பட்ட வேரூன்றி நிலைத்த உரிமையாகும். (17-12-19820ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி விளக்கி முக்கிய நிர்வாகிகள் பேசினர். மாவட்ட பொருளாளர் ஆர். வேணுகோபால் நன்றி கூறினார்.