People returned disappointed as the website did not work at the Jamabandhi near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பட்டா மாற்றம் பதிவேற்றம் செய்யக்கூடிய இணையதளம் இயங்காததால் ஜமாபந்திக்கு வந்த பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்காவில் இன்று காலை வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு ஜமாபந்தி தொடங்கி நடைபெற்றது.

உடும்பியம், பூலாம்பாடி கிழக்கு மற்றும் மேற்கு, வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை மேற்கு மற்றும் கிழக்கு, வெங்கலம் மேற்கு மற்றும் கிழக்கு, வேப்பந்தட்டை வடக்கு மற்றும் தெற்கு, வெண்பாவூர் ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து வந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அமர்ந்து இருந்தனர்.

ஆனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவுக்கு பதிவேற்றம் செய்யக்கூடிய இணையதளம் இயங்காததால் மனுக்கொடுக்க வந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கடந்த 19-ம் தேதி முதல் இன்று வரை 6 நாட்களாக பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு செய்வதற்கான இணையதள செயலி இயங்காமல் உள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தாலுக்கா பகுதிகளிலும் நடைபெறக்கூடிய ஜமாபந்திக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற முக்கியமான இணையதள செயலி இயங்காத நேரத்தில் ஜமாபந்தி நடத்தி வருவதால் பெயரளவில் மட்டுமே ஜமாபந்தி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!