Perambalur: 122nd birth anniversary of Kamaraj; On behalf of the Nadar Association, honor by wearing garlands!

பெரம்பலூர்: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்ணை திறந்த காமராஜரின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவின் முறை சங்கத்தின் பொருளாளர் ஆர். பால்ராஜ் தலைமையில், அச்சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் இளைஞரணி தலைவர் லிங்கம் வரதராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர் பிரபு, செயலாளர் முருகேசன், துணைத் தலைவர் சின்னமணி, இளைஞர் அணி பொதுச் செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செந்தில்வேல், செயலாளர் சந்தனராஜ், சட்ட ஆலோசகர் பாலசுப்பிரமணி, மருத்துவ ஆலோசகர் மோகன், இணை செயலாளர் அழகேசன், இளைஞரணி துணைத் தலைவர் சரவணன், துணை செயலாளர் கதிரேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், லிங்க பாண்டி, சித்தையன், சம்பத், சரவணன், பிரபு, சுந்தர்ராஜ், ஜாஸ்பர், விஜயகுமார், குபேந்திரன், முருகானந்தம், வெங்கடாசலம், அலெக்ஸ், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி, தலைமையிலும், விஜய் மக்கள் இயக்கம், நாம் தமிழர் கட்சி, வி.சி‌.க. உள்ளிட்ட கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!