Perambalur: 1816 appeared for Group 1 exam; Collector visited Karpagam!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி I தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி மையத்தினை கலெக்டர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாற்றுத் திறனாளிகள் தேர்வெழுத செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2,687 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 1,816 நபர்கள் தேர்வு எழுத வந்தனர். 871 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க 1 பறக்கும் படை மற்றும் 3 நடமாடும் குழுக்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்கு அவர்களுக்கென தனி அறைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் தேர்வெழுத உதவி செய்ய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் இருந்து தேர்வு மையத்திற்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.