Perambalur: 2 arrested for extorting Rs. 63 lakh from woman, promising high profits in trading!
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் டிரேடிங் செய்து அதிக லாபம் ஈட்டித்தருவதாக இன்ஸ்டாகிராம் செயலி மூலம் தொடர்புகொண்டு 63,00,000 ரூபாயை ஏமாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர்.
கடந்த ஏப்ரல் மாதம் பெரம்பலூர் மாவட்டம் அயிலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரி ( 38 ) என்பவரிடம் டிரேடிங் மூலம் லாபம் ஈட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள் ரூ.63 லட்சத்து 87 ஆயிரத்து 620-யை வங்கி கணக்குகள் மூலம் பெற்று ஏமாற்றிவிட்டதாக பெரம்பலூர் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் 2.07.2024 அன்று புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப் – இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், சிவநேசன், போலீசார் சுரேஷ், சதீஷ்குமார், திலிப்குமார், முத்துசாமி ஆகேியோர் கொண்ட குழுவினர் குற்றவாளிகளை தேடி கடந்த 18.12.2024 அன்று குஜராத் புறப்பட்டனர்.
இவ்வழக்கில் எதிரிகளை தேடி குஜராத் மாநிலம், வடோதரா சென்று விசாரணை செய்து பின்பு 21.12.2024-ம் தேதி குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் ரதன்பூர் மற்றும் கபுராய் ஜங்ஷன் ஆகிய பகுதியில் குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டதைச் சேர்ந்த எதிரிகள் ஷர்மா சுனில்குமார், ஷர்மா பன்சிலால் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.50,000-த்தை மீட்டனர்.
அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 7 ஏடிஎம் கார்டுகள் போன்றவை கைப்பற்றப்பட்டு எதிரிகள் 22.12.2024-ம் தேதி குஜராத் மாநிலம் வடோதரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று 25.12.2024-ம் தேதி எதிரிகள் வழக்கு சொத்துக்களுடன் சைபர்கிரைம் தனிப்படை குழுவினர் பெரம்பலூர் வந்தடைந்தனர்.
இன்று எதிரிகள் ஷர்மா சுனில்குமார், மற்றும் ஷர்மா பன்சிலால் ஆகியோரை JM-II பெரம்பலூர் I/c JM வேப்பந்தட்டை அவர்களிடம் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் யாரும் தங்களிடம் சுங்க அதிகாரி போன்றோ, காவல் அதிகாரி போன்றோ அல்லது அரசு அதிகாரி போன்றோ பேசி தங்களின் மொபைல் எண் / ஆதார் எண் போதை பொருள் கடத்தல் கும்பலுடனோ / Money Laundering கும்பலுடனோ தொடர்புடையதாக கூறி அச்சுறுதினாலோ, டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாகவோ, டிரேடிங் மூலம் லாபம் ஈட்டலாம் என்றோ, Part Time Job என்றோ டாஸ்க் செய்து லாபம் ஈட்டலாம் என்றோ, பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், குறைந்தவட்டியில் கடன் தருவதாகவும், ஆன்லைன் ரம்மி மற்றும் போலியான லோன் ஆப் போன்றவற்றில் ஆசை வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும்.
சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.