Perambalur: 2 BDOs for not providing information under Right to Information Act Rs. 50 thousand fine!
பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூரை சேர்ந்தவர் குஞ்சிதபாதம், இவர் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி பொதுத் தகவல் அலுவலருக்கு, 2019 – 2022 ஆண்டுகளில் PMAY மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகளின் பட்டியலை கேட்டுள்ளார். தகவல் உரிமை பெறும் சட்டப்பிரிவு 19 (1), 19(3) ன் கீழ் முதல் மற்றும் 2வது மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதனடிப்படையில் 2வது மேல்முறையீட்டு மனுவின்படி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை நடந்தது. அதில், மனுதாருக்கு முழுமையான தகவல்கள் வழங்கி, ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் உரிமைப் பெறும் சட்டத்தின் கீழ் முழுமையான தகவல்கள் வழங்கப்படுகிறது, என முத்திரையிடப்பட்டு ஒவ்வெரு பக்கத்திலும், மனுதாரர் பெற்றுக் கொண்டதற்கான ஓப்புகை அட்டையை சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க உத்தரவு பிறக்கப்பட்டது. மனுதாரருக்கு PMAY மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் பட்டியல், கிராம சபை கூட்ட தீர்மான நகல்கள், பயனாளிகளின் பட்டா நகல்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான 618 பக்கங்களில் 54 பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், முழுமையாக வழங்க ஆணையத்தை கோரினார்.
விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில், மனுதாரரின் தகவல் கோரும் மனுவையும் பொதுத்தகவல் அலுவலரின் பதிலையும் ஆணையம் கவனமுடன் பரிசீலனை செய்கையில் மனுதாரர் கோரிய தகவல்களுக்கு பொதுத்தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் முழுமையான தகவல்களாக இல்லை என இவ்வாணையம் கருதுகிறது. எனவே, பொதுத் தகவல் அலுவலருக்கு இறுதி வாய்ப்பு வழங்கி கீழ்க்கண்ட உத்தரவுகள் இவ்வாணயத்தால் பிறப்பிக்கப்படுகின்றன
. மேற்படி மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரிய தகவல்களான PMAY பசுமை வீடுகள் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளின் விவரம், கிராமசபை கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மான நகல்கள், பயனாளிகளின் பட்டா நகல்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பான மீதமுள்ள 564 பக்கங்களின் நகல்களை தகவல்களாக முழுமையாக தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி தகவல்கள் வழங்கப்படுகிறது’ என்ற முத்திரையுடன் ஒவ்வொரு பக்கத்திலும் சான்றொப்பமிட்டு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல் வாயிலாக சட்டப்பிரிவு 716)-ன்படி கட்டணமின்றி மனுதாரருக்கு தகவல்களை அனுப்பிவைத்து, மனுதாரர் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அட்டையின் நகல் மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட தகவலின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து ஒரு அறிக்கையாக தயாரித்து 13.11.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நேரில் ஆஜராகி இவ்வாணையத்தில் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், இவ்வாணையத்தின் ஆணைக்குட்பட்டு, மனுதாரருக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்பதை இவ்வாணையம் பதிவு செய்து, தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 20(1)-ன்கீழ், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர், வட்டார வளர்ச்சி அலுவலகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலரான S.A. ஷபிகுனிஸா / பொதுத் தகவல் அலுவலர் ரூ.25 ஆயிரம் மட்டும் தண்டமாக அரசு கணக்குத் தலைப்பில் செலுத்தி அது குறித்த விவர அறிக்கையை 13.11.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நேரில் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் உத்தரவிடப்பட்டது.
இதே போல, வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில், மேலூர் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களின் முழுவிவரம், இறுதியாக சாலை அமைத்தது, ஒதுக்கப்பட்ட நிதிகள், திட்டங்களின் பெயர்கள் குறித்தும், சாலை அமைக்கப்பபட்ட ஒப்பந்த நகல் உள்ளிட்ட விவரங்களை முருகானந்தம் கோரியிருந்தார். இவருக்கும் ஆலத்தூரை போலவே, வேப்பந்தட்டை துணைவட்டார வளர்ச்சி அலுவலரும், பொதுத் தகவல் அலுவலருமான ப. கார்த்திகேயினி முறையாக வழங்காத காரணத்ததால், அவருக்கும் ஆணையம் ரூ. 10 ஆயிரம் தண்டம் விதித்தது.
இதே போல, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூரை சேர்ந்த குப்புசாமி தகவல் பெறும் உரிமைச்சட்டததின் கீழ் அன்னமங்கலம் ஊராட்சியில் 1 – 12 வார்டுகளில், நடந்த ஒப்பந்த பத்திரத்தின் நகல்கள், 14வது மற்றும் 15வது மாநில நிதிக்குழு மானியத்தில் மற்றும் பொது நிதியில் செய்யப்பட்ட – 12 வார்டுகளில், நடந்த ஒப்பந்த பத்திரத்தின் நகல்கள், அன்னமங்கலம் ஊராட்சியில் பணி செய்த ஒப்பந்தாரர் அப்துல்கரீம் என்பவரை பற்றிய முழுவிவரங்களையும், அன்னமங்கலம், ஊராட்சியில் புதிய பைப்லைன், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பணிகளை குறித்து கோரினார். இவருக்கும் வேப்பந்தட்டை துணைவட்டார வளர்ச்சி அலுவலரும், பொதுத் தகவல் அலுவலருமான ப. கார்த்திகேயினி முறையாக வழங்காத காரணத்ததால், அவருக்கும் ஆணையம் ரூ. 15 ஆயிரம் தண்டம் விதித்தது. அதோடு, முருகானந்தம், குப்புசாமி இருவருக்கும் தகவல் வழங்கியதை அறிக்கையாக தயாரித்து வழங்கவேண்டும் என்றும்,
தண்டத் தொகையை அரசு கணக்குத் தலைப்பில் செலுத்தி அது குறித்த விவர அறிக்கையை 13.11.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நேரில் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் உத்தரவிடப்பட்டது.
தகவல் உரிமைப் பெறும் சட்டத்தின் கீழ் ஆணையம் எடுத்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.