Perambalur: 2 police jeeps and a car were damaged by fire: Government vehicles escaped due to the screams of a female police officer!

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்குள் பார்க்கிங் பகுதியில், நிறுத்தப்பட்டு இருந்த வாகனப் பிரிவில் பணியாற்றி வரும் சவுந்தர்ராஜன் என்ற போலீஸ் ஏட்டு மனைவி சுகன்யாவிற்கு சொந்தமான ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஹுண்டாய் i20 கார் முற்றிலும் எரிந்தும், காவல்துறைக்கு சொந்தமான 2 மகேந்திரா பொலிரோ ஜீப்புகள் பின் மற்றும் முன் பகுதியில் இன்று காலை சுமார் 6 மணி அளவில் எரிந்து சேதம் அடைந்து வந்தது. இதனைக் கண்ட ஆயுதப்படை பெண் காவலர் ரத்னா கார் தீப்பற்றி எரிவதாக கூச்சலிட்டுள்ளார்.

கூச்சல் சட்டம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்ற ஆயுதப்படை போலீசார் அதிவேகமாக செயல்பட்டு அருகில் இருந்த மோட்டார் பம்ப்செட்டில் இருந்து பைப் ஒன்றை இணைத்து தண்ணீரைத் திறந்து, கார்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் தடுத்து நிறுத்தினர்.

கார்கள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிவதைக் கண்டு பெண் காவலர் கூச்சலிட்டு அனைவரையும் அழைத்ததால் ஆயுதப்படை வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் மற்றும் பைக்குகள் தீக்கிரையாகாமல் தப்பியது.

இது குறித்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் ஏ.டி.எஸ். பி.,மதியழகன் தலைமையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வழக்குப்பதிந்து, ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து நிகழ்ந்ததா? அல்லது மர்ம நபர்கள் எவரேனும் காருக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுதப்படை வளாகத்திற்குள் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அரசு வாகனம் உள்ளிட்ட 3 வாகனங்கள் தீப்பற்றி சேதமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!