Perambalur: 2 police officers suspended for accepting bribe during vehicle check!
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சப் – இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் ஆனந்து ஆகியோர், கையூட்டு பெறுவதாக சமூக வலைதளங்களிலும், செய்திகள் மற்றும் தொலைக்காட்சியிலும் வெளியானது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் சம்பவம் உண்மை என தெரியவந்ததை அடுத்து, இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவிட்டார்.