Perambalur: 2 women who were sleeping inside the house were tied up and robbed of money and jewelry!
பெரம்பலூர் நகரில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் உள்ளது கல்யாண் நகர். அப்பகுதியில் குணசேகரன் மனைவி ஹேமலாதா (45), மற்றும் முத்துக்குமார் மனைவி அபிநயா (24). இருவரும் கணவர்களை பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில், வீட்டினுள் நுழைந்த மர்ம நபர், ஹேமலதா மற்றும் அபிநயா இருவரையும் கை, கால், கண்களை கட்டி போட்டு அவர்களிடம் இருந்து 3 1/4 பவுன் மதிப்புள்ள தங்கசெயின், 2 கிராம் தங்க நாணயம், மற்றும் ரொக்கப்பணம் ரூ. 1.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வெகுநேரமாகியும் வீடு திறக்கப்டாததை பார்த்து கட்டவிழ்த்து விட்டனர். பின்னர், ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த, அப்பகுதியில் உள்ள சிசிசடிவி கேமரா காட்சிகளின் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.