Perambalur: 200 people from the Alternative Party joined the DMK in the presence of A.Raja MP!

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் – மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி. முன்னிலையில், ஓ.பி.எஸ்.அணியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சாத்தனவாடி துரை ஆகியோர் ஏற்பாட்டில் ஜெ.பேரவை அரும்பாவூர் முன்னாள் நகரச் செயலாளர் ஆர்.பெரியசாமி, அரும்பாவூர் பா.ம.க முன்னாள் நகரச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், எறையூர் சர்க்கரை ஆலை ஆகிய கிராமங்களில் இருந்து 200 பேர் தங்களை தி.மு.க.வில் இன்று இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எம்.இராஜ்குமார், செ.நல்லதம்பி,தி.மதியழகன் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் சி.ராஜேந்திரன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!