Perambalur: 3 people arrested for defrauding the public of around Rs. 30 lakhs by running a fake trust!

பெரம்பலூர் துறைமங்கலத்தில் போலியான அறக்கட்டளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்த 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, சத்தியா, மரகதம், பூங்கோதை ஆகியோரிடம் “VAO Vigilance Awareness Organizations என்ற பெயரில் போலியான அறக்கட்டளை நடத்தி மெழுகுவர்த்தி, ஊதூபத்தி தயாரிப்பு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும், விதவைகள், கணவனை கைவிட்டோர் மற்றும் ஊனமுற்றோருக்கு வட்டியில்லா வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும், நிதி உதவி பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியும் ரூ.29,75,000 வரை ஏமாற்றியாதாக பெரம்பலூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சத்தியா (42) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் பெருவளப்பூர் கிராமத்தை சேர்ந்த செல்லம் (55), லால்குடி வட்டம், இருதயபுரத்தை சேர்ந்த திரவியசாமி மகன் தேவக்குமார் (55),

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தை கருணாநிதி மகன் பார்த்தசாரதி (35), ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இது போல பொதுமக்கள் எந்தவொரு அறக்கட்டளை அல்லது தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதன் சட்டபூர்வமான பதிவு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ளுமாறு பெரம்பலூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!