Perambalur: 3 people died in different vehicle accidents!
மொபட் – பைக் மோதல்!
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் நாரயணமூர்த்தி, இன்று காலை சுமார். 7.15 மணி அளவில், தனது மொபட்டில், விளாமுத்தூர் பகுதியில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்பாடி பிரிவு சாலை அருகே கடக்க முயன்றார். அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பைக் ஒன்று நாரயணமூர்த்தி மீது மோதி விபத்திற்குள்ளானது.
அப்போது, படுகாயம் அடைந்த முதியவர் நாரயணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
பைக்கை ஓட்டி வந்த சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த, தேவேந்திரன் மகன் விக்னேஷ் (25). என்பவருக்கு வலகை முறிவு ஏற்பட்டதுடன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து:
இன்று காலை 6 மணி அளவில், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அடுத்துள்ள உள்ள தனியார் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கதக்க வடமாநில வாலிபர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்ற உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீஸார் நடத்தி வருகின்றனர்.
தானே தவறி விழுந்ததில் சாவு!
திருச்சி மாவட்டம், தாத்தங்கையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (40). இவர் தனது தாய் வீட்டிற்கு பக்ரீத் பண்டிகைக்காக வந்த அவர், ஆலம்பாடி பிரிவு அருகே நேற்று முன்தினம் காலை சுமார் 11.45 மணி அளவில் ஸ்கூட்டரில் சென்ற போது, அவரே விழுந்ததில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை, மீட்டு அருகில் இருந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிசிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை 10 மணி அளவில் உயிரிழந்தார்.
இந்த 3 விபத்துகள் குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.