Perambalur: 30 years imprisonment for sexually harassing 4-year-old girl; Rs.1 lakh fine: Mahila Court verdict!
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில், கடந்த 2021-ம் ஆண்டு 4 சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த தாய் கொடுத்த புகாரின்பேரில் Cr.No.20/21 U/s 5 (m) r/w 6 of POCSO Act @ 366(A), 5(m) r/w 6 of POCSO act பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான திருச்சி, ஸ்ரீரங்கம் கீழவாசல், கன்னியப்பன் தெருவை சேர்ந்த வாவாசி மகன் பிரதீப் (23) என்பவருக்கு IPC பிரிவு 366 (A) ன் கீழான குற்றத்திற்கு 10 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் தண்டத்தொகை கட்ட தவறினால் எதிரிக்கு மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தும் மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் பிரிவு 5(m) உ/ இ சட்டம் பிரிவு 6 ன் கீழான குற்றத்திற்கு 20 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் எதிரிக்கு மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையையும் விதித்து பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு மூலம் வழங்கும் நிதி உதவி ரூபாய் 4 லட்சத்தை வழங்க உத்தரவிட்டார். பின்னர், பிரதீப்பை போலீசார் சிறையில் அடைத்தனர்.