Perambalur: 3rd Karthigai Soma week festival at Brahmapureeswarar temple; A large number of devotees participated!

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரவிழாவை ஒட்டி நடந்த வலம்புரி சங்காபிசேகம் மற்றும் சிறப்புஹோம வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் உடனுறை ஸ்ரீஅகிலாண்டேசுவரி கோவிலில் கார்த்திகை சோமவாரவிழாநடந்துவருகிறது.கார்த்திகை 3-வது சோமவாரவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே கலசம்ஸ்தாபனத்துடன் யாகசாலையும், சிவலிங்க வடிவில் 108 சங்குகளை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு கணபதி ஹோமம்,மிருத்யுஞ்செய் ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் மஹாபூர்ணாகுதி நடைபெற்றது.

மூலவருக்கும் அம்பாளுக்கும் பால், தயிர், இளநீர், சந்தனம், பழவர்க்கங்கள் மற்றும் அனைத்து வகை வாசனை திரவியங்களை கொண்டு சோடஷ அபிசேகங்களும்,பக்தர்கள் தங்களது கைகளில் கொண்டு வந்த சங்குகளை கொண்டு மூலவருக்கு மஹாஅபிசேகமும் மஹா தீபாராதனையும் நடத்தப்பட்டது, பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர், முல்லை சிவாச்சாரியார் மற்றும் கச்சேரி வினாயகர் கோவில் அர்ச்சகர் சஞ்சீவி பிரசாத் ஆகியோர் நடத்தி வைத்தார்.

விழாவில் தினவழிபாட்டு குழுவினர், வாரவழிபாட்டு குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்பு நீண்டகியூவரிசையில் நின்று மூலவரை வழிபட்டனர். வெங்கனூர்;பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூரில் உள்ள பிரதோச வழிபாட்டிற்கு பெயர்பெற்ற விருத்தாம்பிகைஉடனுறை விருத்தாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார 3-வது விழா சிறப்பாக நடந்தது. இதனைமுன்னிட்டு மூலவருக்குஅபிசேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
குரும்பலூர் : பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள ஸ்ரீதர்மசம்வர்த்தினி, பஞ்சநதீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை சோமவார நிறைவைமுன்னிட்டு மூலவருக்கு அபிசேகஆராதனைகள் நடந்தன. இதில் குரும்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!